விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ டீஸர் எப்போது?

நாளை மறுநாள் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ டீஸர்!

செய்திகள் 17-Sep-2016 10:11 AM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்து வரும் ‘சைத்தான்’ பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வருகிற திங்கள் கிழமை (19-9-16) மாலை 6.30 மணிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படம தெலுங்கில் ‘பெத்தாலடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் கதாநாயகியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். ‘விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசாத் கவனிக்கிறார். வழக்கம் போல இப்படத்திற்கும் விஜய் ஆன்டனியே இசை அமைக்கிறார்! செங்கல்பட்டு ஏரியாவில ’பிச்சைக்காரன்’ படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் ’சைத்தான்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைபற்றியிருக்கிறது.

#VijayAntony #Pichaikkaran #Saithan #PradeepKrishnamoorthy #ArundathiNair #VijayAntonyFilmCorporation

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;