விஜய் நடிப்பில் ‘ப்ரியமுடன்’, ‘யூத்’, சுந்தர்.சி. நடிப்பில் ‘பெருமாள்’, ரமேஷ் நடிப்பில் ‘ஜித்தன்’ உட்பட சில படங்களை இயக்கிய வின்சென்ட் செலவா இயக்கத்தில் உருவாகயுள்ள படம் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’. ‘WOW 4 STUDIOS’ நிறுவனம் சார்பில் லக்ஷ்மி தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். அருந்ததி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, முருகதாஸ், ஜோமல்லூரி, மனோபாலா, டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன், ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஆர்.தேவேந்திரன் இசை அமைக்கிறார். எஸ்.கே.மிட்செல் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம குறித்து இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறும்போது, ‘‘விருமாண்டி ஊருக்கும், சிவனாண்டி ஊருக்கும் இருக்கும் தண்ணீர் பிரச்சனை 40 வருஷத்துக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை தன் மகள் நந்தினியின் திருமணத்தை வைத்து தீர்த்து விடலாம் என்று தீர்மானித்த விருமாண்டி நந்தினியை சிவனாண்டி மகனுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக பஞ்சாயத்தில் வாக்கு தருகிறார். இந்நிலையில் சென்னையிலிருந்து வரும் திரைப்பட இயக்குனர் கன்னிச்சாமியால் அவர்களது திருமணம் தடைப்பட்டு நின்று விட, ஊர் பிரச்சனை மேலும் பெரிதாகிறது. நின்றுபோன திருமணத்தையும், தண்ணீர் பிரச்சனையும் இயக்குனர் கன்னிச்சாமி எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. அதனை காதல், காமெடி என ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறேன்’’ என்றார. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
#VirumaandikumSivanaandikum #ThambiRamaiah #VincentSelva #ManoBala #RoboShankar #AadukalamMurugadoss #TPGajendiran
‘பவானி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் கமல்போரா வழங்க, ராஜேஷ் குமார் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது....
Direction: A. N. PitchumaniProduction: Shraddha Entertainment & Shvedh GroupCast: Jai, Reba Monica...
பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரெடி’...