மோகன்லாலை இயக்கும் பிருத்திவிராஜ்!

மோகன்லால் படம் மூலம் இயக்குனராக களமிறங்கும் பிருத்திவிராஜ்!

செய்திகள் 16-Sep-2016 9:56 AM IST VRC கருத்துக்கள்

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பிருத்திவிராஜ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இவர் இயக்கவிருக்கும் முதல் படத்திலேயே மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். ‘லூசிஃபர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகவிருக்கிறது. மோகன்லாலின் மானேஜரும், திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பெரும்பாவூர் ஆண்டனி தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை பழம்பெரும் நடிகரான கோபியின் புதல்வரும், நடிகருமான முரளி கோபி எழுதியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை மோகன்லால தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த தகவலுக்கு கீழே Warning: Cigarettes are injurious to health என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. மலையாள சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரு சினிமாவில் இணையவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.>
#Prithivraj #Mohanlal #Loosifer #PermabavurAntony #Gopi #MuraliGopi #Oppam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;