உதயநிதி - மஞ்சிமா படம் பூஜையுடன் துவங்கியது!

கௌரவ் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது

செய்திகள் 15-Sep-2016 3:38 PM IST Chandru கருத்துக்கள்

தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘சிகரம் தொடு’ படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். ‘டிமான்டி காலனி’யில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

#UdhayanidhiStalin #ManjimaMohan #GauravNarayanan #LycaProduction #RKSuresh #DImman #Videsh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;