சசிகுமாரின் அடுத்த படம் பூஜையுடன் துவங்கியது!

சசிகுமாரை இயக்கும் பாலா உதவியாளர்!

செய்திகள் 15-Sep-2016 3:03 PM IST VRC கருத்துக்கள்

’கிடாரி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு கிராமத்து கதையில் நடிக்கிறார் சசிகுமார் என்றும் இந்த படத்தை சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ நிறுவனமே தயாரிக்கிறது என்றும் செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்படத்தை இயக்குனர்கள் பாலா, சுதா ஆகியோரிடம் பணிபுரிந்த பி.பிரகாஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்தது. இப்படத்தில் சசிகுமாருடன் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி உட்பட பலர் நடிக்கின்றனர். கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. ‘கிடாரி படத்திற்கு இசை அமைத்த தர்புகா சிவாவே இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவை ரவீந்திரநாத் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;