லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’ அதிகாரபூர்வா ரிலீஸ் தேதி!

அக்டோபர் 14-ல் வெளிவருகிறது  லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘அம்மணி’

செய்திகள் 15-Sep-2016 12:20 PM IST VRC கருத்துக்கள்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் ‘அம்மணி’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘டேக் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படம், சாலம்மா (57 வயது), அம்மணி (82 வயது) என்னும் இரண்டு கதாபாத்திரங்களின் உறவை சொல்லும் கதையாம். லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சாலம்மா என்ற கதாபாத்திரத்திலும், சுப்புலக்‌ஷ்மி (’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவின் பாட்டியாக நடித்தவர்) அம்மணி கதாபாத்திரத்திலும் நடிக்கும் இப்படத்தில் நிதின் சத்யா, ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீபாலாஜி, ரெஜின் ரோஸ், ரேணுகா, அன்னம் ஆகியோரும் நடிக்கிறார்கள். 105 நிமிடங்களே ஓடும் விதமாக அமைந்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை கே.ஆர். இம்ரான் அஹமத் கவனிக்க, கே இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.எஸ்.ராஜா, படத்தொகுப்பை கே.ஆர்.ரெஜித் கவனிக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘‘அம்மணி’ என்ற தலைப்பை வைத்து இது பெண்களுக்கான படம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம. இது அனைவருக்குமான படம்’’ என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா!

#Ammani #LakshmiRamakrishnan #Subbulakshmi #NithinSathya #RoboShankar #SriBalaji #Renuka

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வாசம் ட்ரைலர்


;