ஜப்பானில் மன்னர் மன்னன்!

ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜோக்கர்’ திரைப்படம் ஜப்பானில் திரையிடப்படுகிறது

செய்திகள் 15-Sep-2016 11:36 AM IST Chandru கருத்துக்கள்

‘குக்கூ’ படத்தைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ திரைப்படத்திற்கு விமர்சனரீதியாக மட்டுமின்றி வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த பின்னரும்கூட தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் படம் பற்றி சமூகவலைதளங்களில் அவ்வப்போது எழுதி வருவதால், இன்னமும் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் கதாநாயகன் மன்னர் மன்னன் ரசிகர்கள் நெஞ்சில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்தியாவிலும், வெளிநாடுகள் சிலவற்றிலும் இதுவரை திரையிடப்பட்ட ‘ஜோக்கர்’ திரைப்படம் முதல்முறையாக ஜப்பான் நாட்டிலும் திரையிடப்படவிருக்கிறது. வரும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ஜப்பானின் சிபா கென் நகரிலுள்ள திரையரங்கில் மதியம் 3 மணி காட்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜப்பான் வாழ் தமிழ் ரசிகர்கள் மன்னர் மன்னனை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

#Joker #RajuMurugan #DreamWarriorPictures #SRPrabhu #SeanRolden #Gurusomasundaram #GayathriKrishna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;