சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூர்யா முதலானோர் நடிக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டப்பிங் வேலைகள் நேற்று துவங்கியது. இப்படம் 1985-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு மாவீரனை பற்றிய கதையாம். . அதனால் அந்த காலத்து உடைகள், வீடுகள், இடங்கள் எப்படி இருக்குமோ அதையெல்லாம் மிக கவனமாக தேர்வு செய்து இப்படத்தை படமாக்கியுள்ளார்களாம்.
ஒளிப்பதிவுகு சூர்யா, இசைக்கு டி.இமான் என கூட்டணி அமைத்து சுசீந்திரன் உருவாக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 1-ஆம தேதி வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் ‘மாவீரன கிட்டு’வை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
#MaaveeranKittu #VishnuVishal #SriDivya #Suseendiran #Suriya #DImman #Parthipan
ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...
நடிகர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்! இவரது...
சூர்யா நடித்து வரும் படங்கள் ‘NGK’ (நந்த கோபால குமரன்) மற்றும் ‘காப்பான்’. இதில் ‘NGK’ படத்தை...