உதயநிதி, எழில் பட தலைப்பு?

உதயநிதியின் ‘சரவணன் இருக்க பயமேன்’

செய்திகள் 15-Sep-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

விஷ்ணு விஷாலை வைத்து எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து எழில் அடுத்து இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநயகனாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெயர் சூட்டப்படாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இந்த படத்திற்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என்று டைட்டில் சூட்டியுள்ளனர். எழிலும், உதயநிதி ஸ்டாலினும் முதன் முதலாக இணையும் இப்படத்தில் உதயநிதியுடன் ரெஜினா காசென்டரா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சூரி காமெடி கேரக்டரில் நடிக்கிறார். எழிலின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#UdhayanidhiStalin #Manithan #Gethu #Ezhil #SaravananIrukkaBayamaen #Rajinikanth #Chandramukhi #Karaikal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;