ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘இருமுகன்’. தமின்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை தமிழகத்தில் ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டது. இரண்டு வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் படத்திற்கு விமர்சனங்கள் இருவேறாக அமைந்தபோதும் நல்ல ஓபனிங் கிடைத்தது. அதோடு, படத்தை ஒருநாள் முன்பாக வியாழக்கிழமையே வெளியிட்டதால் முதல் 4 நாட்களில் மட்டுமே பெரிய தொகையை வசூலித்தது இப்படம். தவிர, பக்ரீத் விடுமுறையால் நேற்றும் தமிழகத்தில் தியேட்டர்களில் கூட்டம் குவிந்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் ‘இருமுகன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பிருந்ததால் 50 கோடிக்கும் மேல் ‘இருமுகன்’ வசூல் செய்திருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று ‘இருமுகன்’ படத்தின் வெற்றி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, படத்தின் அதிகாரபூர்வ வசூலை அறிவித்தது தயாரிப்புத் தரப்பு. தமிழகத்தில் மட்டுமே 29.5 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்திருக்கும் ‘இருமுகன்’ உலகளவில் 66 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதோடு, கபாலி, தெறி படங்களுக்குப் பிறகு சத்யம் திரையரங்கத்தில் இந்த வருடம் அதிக வசூல் குவித்த படம் ‘இருமுகன்’தான் என்றும் கூறினார்கள்.
#Irumugan #Kabali #Theri #Vikram #Nayanthara #NithyaMenen #ThameensFilms #AnandShankar #ShibuThameem
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...