கார்த்தியைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ?

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தின் ஹீரோ?

செய்திகள் 14-Sep-2016 11:21 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படம் குறித்து கவனம் செலுத்த மாட்டார் இயக்குனர் மணிரத்னம். ஆனால், தற்போது கார்த்தி நாயகனாக நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான வேலைகளையும் அவர் துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் அந்த புதிய படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் அப்படத்தையும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

காற்று வெளியிடை படத்தின் வேலைகள் தற்போது பிஸியாக இருப்பதால், அதன் வேலைகள் முடிவடைந்ததும் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கும் எனத் தெரிகிறது.

#ManiRatnam #Karthi #KaatruVeliyidai #RamCharanTeja#OhKadhalKanmani #MadrasTalkies #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;