வெங்கட் பிரபு, எம்.ராஜேஷ் இணையும் படம்!

எம்.ராஜேஷ் கதையை படமாக்கும் வெங்கட் பிரபு!

செய்திகள் 14-Sep-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘சென்னை-600028’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை இயக்கி, தயாரித்து வரும் வெங்கட் பிரபு, இப்படத்தை நவம்பர் மாதம் 10-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இயக்குனர் எம்.ராஜேஷ் எழுதியுள்ள ஒரு கதையை படமாக்க முடிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ பட வெளியீட்டுக்கு பிறகு எம்.ராஜேஷ் கதையை படமாக்கும் வேலைகளை துவங்கவுள்ளார். இந்த படம் வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்குமாம்! இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் நடைபெறவிருக்கிறதாம்.

#Rajesh #VenkatPrabhu #Chennai28II #YuvanshankarRaja #Saroja #Mankatha #Goa #Biriyani #Masss#Siva #Jai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;