வில்லன் அவதாரம் எடுக்கும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்!

‘யாக்கை’யில் வில்லனாகும் ‘ஜோக்கர்’ ஹீரோ!

செய்திகள் 14-Sep-2016 9:58 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்கள் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து பலரது பாராட்டுக்கள் பெற்றவர் குரு சோமசுந்தரம். இந்த படத்தில் ஒரு அப்பாவி இளைஞனாக நடித்து அனைவரையும் கவர்ந்த குரு சோமசுந்தரம், அடுத்து வில்லனாக அவதாரம் எடுத்து மிரட்ட வருகிறார். குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா கதாநாயகனாகவும், சுவாதி கதாநாயகியாகவும் நடிக்கும் ‘யாக்கை’ படத்தில் வில்லன் அவதாராம் எடுத்துள்ளார் குரு சோமசுந்தரம்.

"ஜோக்கர்’ திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், 'யாக்கை' திரைப்படம் இதுவரை யாரும் கண்டிராத அவருடைய மறு முகத்தை பிரதிபலிக்கும் படமாக இருக்கும். நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் 'யாக்கை' படத்தில் நடிப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான ஒரு வில்லனாக 'யாக்கை'யில் நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம். இவரது பங்களிப்பு எங்களது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'யாக்கை' படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்!

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ‘பிரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரித்து வருகிறார்.

#Gurusomasundaram #Joker #RajuMurugan #Yaakkai #Jigarthanda #Pandiyanadu #AaranyaKaandam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி டீஸர்


;