மதன் கார்க்கியின் ‘doopaadoo.com’ ஆப்ஸை வெளியிட்ட யுவன்!

பாடல்களை கேட்கும் ரசிகர்களுக்கும் பணம் கிடைக்கும்!

செய்திகள் 13-Sep-2016 4:49 PM IST VRC கருத்துக்கள்

பாடலாசிரியர் மதன் கார்க்கி தலைமையில் ஒரு சில இளைஞர்களால் இசை மற்றும் பாடல்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய இணைய தளம் ‘doopaadoo.com.’. யு-ட்யூபை போன்று செயல்பட்டு வரும் இந்த இணையதளம் மூலம் திரைப்பட பாடல்கள், தனி ஆல்பங்கள் மற்றும் ட்யூன்ஸ் என இசை சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் வெளியிடும் வாய்ப்பினை உருவாக்கியிருப்பதோடு, அந்த பாடல்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பணம் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் இந்த இணையதளம் உருவாக்கியுள்ளது. ‘அபிராமி’ ராமநாதன் தயாரிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியான ‘உன்னோடு கா’ திரைப்படத்தின் பாடல்கள் இந்த இணையதளம் வாயிலாக தான் வெளியானது! அதைப் போல இப்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ திரைப்படத்தின் பாடல்களும் doopaadoo.com வழியாக தான் வெளியாகவிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் நாளை doopaadoo.com-ல் வெளியாகவிருக்கிறது. இந்த இணையத்தில் வெளியாகும் பாடல்கள் மற்றும் இசையை கேட்க விரும்புவோர், ட்வுன்லோட் செய்ய விரும்புவோருக்காக doopaadoo app ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று சென்னையில் நடந்த ‘சென்னை – 28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட, இயக்குனர் வெங்கட் பிரபு பெற்று கொண்டார். ‘doopaadoo.com’க்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பணம் கிடைக்கும் வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளனர் என்பது இதன் சிறப்பாகும்!

#Chennai28II #VenkatPrabhu #YuvanShankarRaja #PremgiAmaran#Shiva #NithinSathya #InicoPrabhakar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தமிழ் படம் 2 டீஸர்


;