நவம்பர் 10-ல் வெங்கட் பிரபுவின் ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’

வெங்கட் பிரபுவின் ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ ரிலீஸ் தேதி?

செய்திகள் 13-Sep-2016 4:21 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘சென்னை-600028’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை- 28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜய்வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, அஜய்ராஜ் இளவரசு, விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி, மகேஸ்வரி முதலானோருடன் இப்படத்தில் மேலும் தயாரிப்பாளர் டி.சிவா, வைபவ், மஹத், கிருத்திகா, டாக்டர் வித்யா, அறிமுகம் சனா ஆகியோரும் கை கோர்த்து களமிறங்குகின்றனர்.

முதல் பாகத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மதன் காராக்கியின் தலைமையில் இயங்கி வரும் doopaadoo.com-ல் நாளை வெளியாகவிருக்கிறது. ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ என்ற பேனரில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கியுள்ள இப்படம் நவம்பவர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ’சென்னை-600028’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றாலும் இப்படத்தின் கதைக்களமும் ஆட்டமும் வேறுவிதமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு! ராஜேஷ் யாதவ ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீன் கவனித்து வருகிறார்.

#Chennai28II #VenkatPrabhu #YuvanShankarRaja #PremgiAmaran#Shiva #NithinSathya #InicoPrabhakar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;