‘’இருமுகன்’ ஸ்டைலில் களமிறங்கும் ‘தொடரி’

’தொடரி’யின் அதிகாரபூர்வ சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செய்திகள் 12-Sep-2016 3:20 PM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தொடரி’ படத்தின் சென்சார் வேலைகள் முடிவுறாத காரணாத்தால் இப்படம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த படி 16ஆம் தேதி வெளியாகாது என்றும், ஒரு வாரம் கழித்து, அதாவது 23-ஆம் தேதி தான் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை காலையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ‘தொடரி’யின் சென்சார் இன்று முடிந்து விட்டது. சென்சாரில் ‘தொடரி’க்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ‘தொடரி’யை வருகிற 22-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

வழக்கமாக புதுப் படங்கள் வெள்ளிக் கிழமையன்று தான் வெளியாகும். ஆனால் சமீபகாலமாக வெள்ளிக் கிழமைக்கு ஒரு நாள் முன்னதாக வியாழ கிழமைகளிலும் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். விக்ரம் நடிப்பில் உருவான ‘இருமுகன்’ படம் கூட வியாழ கிழமை தான் வெளியானது. முதல் நான்கு நாட்கள் வசூல் மிக முக்கியமானது என்பதால் அதை டார்க்கெட் வைத்து இப்போது வியாழ கிழமைகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய முன் வருகிறார்கள்! இது வரும் காலங்களில் தொடர வாய்ப்பிருக்கிறது.

#Thodari #Dhanush #KeerthiSuresh #PrabhuSolomon #RadhaRavi #DImman#SathyaJothiFilms #VeeraSivaji

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;