50 கோடி வசூல் செய்த ‘இருமுகன்’

வசூலில் சாதனை படைக்கும் ‘இருமுகன்’

செய்திகள் 12-Sep-2016 12:57 PM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் முதலானோர் நடித்து கடந்த 8-ஆம் தேதி வெளியான படம் ’இருமுகன்’. ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் உலகம் முழுக்க (கர்நாடக மாநிலம் தவிர்த்து…) வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், வெளியான 4 நாட்களில் மட்டும் ‘இருமுகன்’ 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையிலான வசூலில் தமிழகத்தை விட ஆந்திர மாநிலத்திலிருந்து கிடைத்த வசூல் அதிகம் என்றும், ஆந்திராவில் இருமுகனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ படத்தை தொடர்ந்து 4 நாட்களில் அதிக வசூல் செய்த படம் ‘இருமுகன்’ என்பதும், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருப்பது ‘ஆரா சினிமாஸ்’ என்பதும் குறிப்பிடத்தக்கது .

#Irumugan #Vikram #Nayanthara #NithyaMenen #AnandShankar #HarrisJayaraj #ShibuThameem

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;