கலையரசன், ஷிவதா இணையும் படம்!

அறிமுக இயக்குனர் இயக்கும் அதே கண்கள்!

செய்திகள் 12-Sep-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ் முதலானோர் நடித்து 1967-ல் வெளியான படம் ‘அதே கண்கள்’. இப்போது இதே டைட்டிலில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன், அபிஷேக் முதலானோர் நடிக்கிறார்கள். சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். காதல் மற்றும் த்ரில்லர் கலந்த கதையமைப்பைக் கொண்ட இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டதாம்! இப்படத்திற்கு ‘அதே கண்கள்’ என்று டைட்டில் வைக்க காரணம் கதையில் அதற்கான சரியான காரணம் இருக்கிறது என்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.

#Kalaiarasan #Shivatha #AdheKankal #Janani #BalaSaravanan #RohinVenkatesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மபிரபு -டீஸர்


;