‘தொடரி’ புதிய ரிலீஸ் தேதி?

ஒரே நாளில் வெளியாகும் தனுஷ், விக்ரம் பிரபு படங்கள்!

செய்திகள் 12-Sep-2016 11:08 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் ’தொடரி’. இரயிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். இப்படம் இம்மாத்ம் 16 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் சென்சார் இன்னும் முடியவில்லையாம். இதனால் இப்படத்தின் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளி, அதாவது 23-ஆம் தேதி தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விக்ரம் பிரபு, ஷாம்லி இணைந்து நடித்துள்ள ‘வீரசிவாஜி’ திரைப்படமும் 23-ஆம் தேதி தான் வெளியாகவிருக்கிறது. இதனால் தனுஷ், விக்ரம் பிரபு நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைப்பாளர் டி.இமான் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Thodari #Dhanush #KeerthiSuresh #PrabhuSolomon #RadhaRavi #DImman#SathyaJothiFilms #VeeraSivaji

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;