‘கொடி’ படத்தில் நடித்து முடித்த கையோடு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கவும் இருக்கிறார். அத்துடன் ஆங்கில படமொன்றில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது கிடைத்துள்ள தகவலின் தனுஷ் நடிக்கும் ஆங்கில படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இரான் நாட்டை சேர்ந்த மர்ஜானே சட்ராபி இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் உமா துர்மன், அலெக்சாண்ட்ரா டாடிரோ முதலானோரும் நடிக்கிறார்கள். பிரபு சால்மன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ விரைவில் வெளியாகவிருக்கிறது.
#Dhanush #Thodari #Kodi #MarjaneSatrapi #UmaThurman #AlexandraDaddorio #Vada Chennai
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...