தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ரெஜினா கெஸன்ட்ரா இப்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிவிட்டார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ரெஜினா கையில் இப்போது 5 தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, லோகேஷ் இயக்கத்தில் சந்தீப், ஸ்ரீ நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மாநகரம்‘’, அதர்வா நடிப்பில் உருவாகிவரும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களோடு உதயநிதிக்கு ஜோடியாகவும் புதிய படமொன்றில் நடிக்கிறார் ரெஜினா. இந்த படங்களோடு இப்போது சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கவும் ‘கமிட்’டாகியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதற்குதான் ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அக்டோபர் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.
#Regina Cassandra #Maanagaram #KediBillaKilladiRanga #SJSuryah #NenjamMarappathillai #Selvaraghavan #Santhanam
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ மற்றும் ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில்...