யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘நெருப்புடா...’ பாடகர்!

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘நெருப்புடா...’ பாடகர்!

செய்திகள் 10-Sep-2016 12:36 PM IST Chandru கருத்துக்கள்

‘கபாலி’ படத்தின் வெற்றியில் ‘நெருப்புடா...’ பாடலுக்கும் ஒரு சிறிய பங்குண்டு. சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடிய இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யு ட்யூபில் வெளியான இப்பாடல் இதுவரை 2 கோடியே 18 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதிலிருந்தே இப்பாடலின் வெற்றியைத் தெரிந்துகொள்ளலாம். ‘நெருப்புடா...’ புகழ் அருண்ராஜா காமராஜ் இப்போது யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.

ஜெய், அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை ‘70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பலூன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 40% மேல் நிறைவடைந்துள்ளதாம்.

#Kabali #Neruppuda #Rajinikanth #ArunKamaraj #YuvanShankarRaja #SanthoshNarayanan #Baloon

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;