சரத்குமார், ஜி.வி.பிரகாஷின் கூட்டணியில் ‘அடங்காதே’

சரத்குமாருடன் இணைந்து ‘அடங்காதே’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

செய்திகள் 9-Sep-2016 11:09 AM IST Chandru கருத்துக்கள்

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், தற்போது புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் தீபாவளியன்று ரிலீஸாக உள்ளது. அதோடு, புரூஸ் லீ படமும் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், தற்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜி.வி.

‘அடங்காதே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க சண்முகம் முத்துசாமி இயக்கிறார். இப்படத்தில் ஜி.வி.யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார். ஜி.வி.க்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ஜி.வி. இசையமைக்க, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் விவேக் ஹர்ஷன்.

#SarathKumar #GVPrakashKumar #Adankathey #EnakkuInnoruPerIrukku #BruceLee #KadavulIrukkanKumaru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;