தொடரும் ‘கபாலி’ சாதனை!

அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்த ‘கபாலி’ திரைப்படம் தற்போது முக்கிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது

செய்திகள் 9-Sep-2016 10:52 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினி நடித்த படங்களிலேயே குறுகிய கால தயாரிப்பாக உருவாகி இந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி வெளியான படம் ‘கபாலி’. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கிய இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே பல சாதனைகளையும், ஆச்சரியங்களையும் படைத்தது. அதில் உச்சபட்ச சாதனையாக கபாலி டீஸருக்கு யு ட்யூபில் 3 கோடியே 20 லட்சம் பார்வையிடல்களும், நான்கரை லட்சம் ‘லைக்’குகளும் கிடைத்ததைக் கூறலாம்.

அதேபோல் படம் வெளியான முதல் நாளில் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் ‘கபாலி’ உருவெடுத்தது. தற்போதைய கணக்கு நிலவரங்களின்படி 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் ‘கபாலி’ திரைப்படம் தற்போது இன்னொரு மைல்கல்லையும் எட்டியிருக்கிறது. ஆம்... படம் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்னும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ‘கபாலி’ ஓடிக் கொண்டிருக்கிறது. 100 நாட்களைக் கடந்தும் ‘கபாலி’ ஓடும் என்பதே சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது!

#Kabali #Rajinikanth #Superstar #Ranjith #Dhansika #RadhikaApte #Kalaiarasan #AttakathiDinesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;