ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’, விஷாலின் ‘கத்திசண்டை’ படங்களை தயாரித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கத்திசண்டை’ படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடங்களில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.... ‘‘இந்த படத்திற்காக விஷால் - தமன்னா இருவரும் பங்குபெற்ற “குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும் நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே’’ என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டது. அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற “எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது’’ என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த கத்திசண்டை வருகிற தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது’’ என்றார் இயக்குனர் சுராஜ்.
ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன்
இசை - ஹிப் ஹாப் தமிழா
பாடல்கள் - நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா
எடிட்டிங் - ஆர்.கே.செல்வா
ஸ்டன்ட் - கனல்கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்
கலை - உமேஷ்குமார்
நடனம் - தினேஷ், ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை - பிரேம் ஆனந்த்
தயாரிப்பு - எஸ்.நந்தகோபால
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுராஜ்
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...