இரட்டை வேடங்களில் சத்யராஜ், நாயகியாக அமலாபால்!

சத்யராஜ் இரட்டைவேடங்களில் நடிக்கும் ‘முருகவேல்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார் அமாலா பால்

செய்திகள் 9-Sep-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் ‘முருகவேல்’. இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அமலா பால் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஜோஷி கூறியதாவது.... ‘‘சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக ஏற்படுத்த பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அமலா பால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு ஆட்டோ ஓட்டுனராக வந்து காமெடியில் கலக்கி இருக்கிறார். படத்தின் படிப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கோவாவிலும் நடைபெற்று முடிந்தன விரைவில் படம் வெளியாக உள்ளதாக’’ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;