சூப்பர் ஸ்டாரிடம் வாழ்த்துப்பெற்ற ராகவா லாரன்ஸ்!

ரஜினியை நேரில் சந்தித்து தன் அடுத்த படம் குறித்தும், தாயாருக்கு கோவில் கட்டி வருவது குறித்தும் கூறி வாழ்த்துப் பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்

செய்திகள் 9-Sep-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ எனும் பேய்ப் படத்தில் நடிக்கிறார் லாரன்ஸ். பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘சிவலிங்கா’ எனும் கன்னடப்படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் நடிக்கிறார் லாரன்ஸ். முதலில் இப்படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், கபாலி, எந்திரன் 2 படங்களில் ரஜினி பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் இந்த வாய்ப்பை லாரன்ஸ் வசம் வந்தது. சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு தற்போது படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்பந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினியிடம் கூறியுள்ளாராம் லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;