‘தள்ளிப் போகாதே....’ : பேங்காக் செல்லும் சிம்பு, மஞ்சிமா!

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப்போகாதே....’ பாடல் படப்பிடிப்பு பேங்காக்கில் நடைபெறுகிறது

செய்திகள் 8-Sep-2016 4:01 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ‘தள்ளிப்போகாதே...’ பாடல்தான் யூத்களின் லேட்டஸ்ட் தேசிய கீதம். கிட்டத்தட்ட 2 கோடி முறை யு ட்யூப்பில் பார்வையிடப்பட்ட இப்பாடலின் படப்பிடிப்பு சிற்சில நிதி பிரச்சனைகளால் இத்தனை நாட்களாக படமாக்கப்படமாலேயே இருந்து வந்தது. இந்த ஒரு பாடலைத் தவிர மற்ற படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால், இப்பாடல் இல்லாமலேயே படத்தை ரிலீஸ் செய்துவிடலாமா எனவும் யோசிப்பதாக கௌதமே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இப்பாடல் படத்தில் இடம்பெறாதோ என ரசிகர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்தனர்.

நல்லவேளையாக, இப்போது எல்லாம் கைகூடி வந்திருக்கிறது. கௌதம், சிம்புவுக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி இப்போது ‘தள்ளிப்போகாதே...’ பாடல் படப்பிடிப்பிற்காக பேங்காக் பறக்கவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’ டீம். இப்பாடல் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;