உதயநிதி ஸ்டாலினை இயக்கும் தளபதி!

உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை தளபதி பிரபு இயக்குகிறார்

செய்திகள் 8-Sep-2016 3:31 PM IST Chandru கருத்துக்கள்

‘மனிதன்’ தந்த வெற்றியால் உற்சாகத்திலிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தன் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். தற்போது எழில் இயக்கத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் உதயநிதி, இப்படத்தைத் தொடர்ந்து ‘சிகரம் தொடு’ கௌரவ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் உதயநிதி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘ஒரு நாள் கூத்து’ நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில் பார்த்திபனும், காமெடியான சூரியும் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார்கள். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தளபதி பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;