பாலாவின் நாயகியான ‘சூப்பர் சிங்கர்’ பிரகதி!

பாலா இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி ஒப்பந்தமாகியிருக்கிறார்

செய்திகள் 8-Sep-2016 3:19 PM IST VRC கருத்துக்கள்

சசிகுமார், வரலட்சுமி நடித்து வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கவிருக்கும் படமென்ன? அதில் நாயகன், நாயகியாக யார் நடிப்பார்கள் என கோலிவுட் ஆவலாய் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம், ஆர்யா, விஷால் நடிக்கும் படத்தை பாலா இயக்கவிருக்கிறார் எனவும் ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கயிருக்கிறார் பாலா எனவும் செய்திகள் சுழன்று கொண்டிருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், பாலாவின் புதிய படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளிவந்திருக்கிறது. ‘சாட்டை’ படத்தில் நாயகனாக நடித்த யுவன் பாலாவின் இந்த புதிய படத்திலும் நாயகனாக நடிக்கிறார். என்ன கதை, வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்?, டெக்னீஷியன்கள் யார் யார்? என்பன போன்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பரதேசி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓர் மிருகம்’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடகியாக பாலா அறிமுகம் செய்யப்பட்டவர் பிரகதி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;