இரண்டாவது தயாரிப்பைத் துவங்கிய நடிகர் விஷ்ணு விஷால்!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளரான விஷ்ணு விஷாலின் இரண்டாவது படைப்பிற்கு இன்று பூஜை

செய்திகள் 7-Sep-2016 11:35 AM IST Chandru கருத்துக்கள்

சிறிய பட்ஜெட் படங்களில் நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. எழில் இயக்கத்தில் வெளிவந்த இந்த காமெடி படம் 50 நாட்கள் ஓடி விஷ்ணுவின் கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த சந்தோஷத்தின் சுவடு மறையும் முன்பே தனது அடுத்த தயாரிப்பிற்கான பூஜையை இன்று நடத்தி முடித்துள்ளார் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கவிருக்கும் இப்படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

#VishnuVishal #VelainuVandhuttaVellaikaaran #MaaveeranKittu #Suseenthiran #Muruganandham #VishnuVishalProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;