‘போகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி அடுத்ததாக விஜய் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ரொமான்டிக் ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தமான், தாய்லாந்து உட்பட மலைக்காடுகள் சிலவற்றில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதல்முறையாக இயக்குனர் விஜய்யுடன் இணைகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
இப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் திலீப்குமாரின் பேத்தியான சாயிஷா சைகலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அஜய் தேவ்கன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஷிவாய்’ பாலிவுட் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கிறார் சாயிஷா. அதோடு அகில் என்ற தெலுங்கு படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார்.
#JayamRavi #Bogan #DirectorVijay #ThaniOruvan #Thiru #HarrisJayaraj #Dilipkumar #SayeshaSaigal #JayamRaviNewMovie
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...