‘கிடாரி’ சசிகுமாரின் அடுத்த கிராமத்துப் படம்!

‘கிடாரி’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கவிருக்கும் புதிய படம்!

செய்திகள் 7-Sep-2016 11:11 AM IST Chandru கருத்துக்கள்

‘கம்பெனி புரொடக்ஷன்’ சார்பில் எம்.சசிகுமார் தயாரித்து, நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘கிடாரி’. கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷன் படமாக அறிமுக இயக்குனர் பிரசாத் இப்படத்தை இயக்கியிருந்தார். 4 நாட்களில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாயை தமிழகத்தில் இப்படம் வசூல் செய்துள்ளதால் படத்தை தயாரித்த சசிகுமார் சந்தோஷத்தில் உள்ளார். இதனால் தனது அடுத்த படத்தையும் கிராமத்துப் படமாகவே தயாரிக்கவிருக்கிறார் அவர்.

‘கிடாரி’யைத் தொடர்ந்து புதிய இயக்குனர் பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் சசி. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு தேனியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகி உட்பட படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம், டெக்னீஷியன் லிஸ்ட் ஆகியவை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

#Kidaari #Sasikumar #Vetrivel #NikhilaVimal #DarbugaSiva #PrasathMurugesan #Prakash

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;