சென்னை டு பாண்டிச்சேரி : ஜி.வி.பிரகாஷின் திகில் பயணம்!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 7-Sep-2016 10:56 AM IST Chandru கருத்துக்கள்

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஆர்யா, ஜீவா, கார்த்தி, உதயநிதி ஆகியோரின் படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இயக்குகிறார். ஏற்கெனவே ஜி.வி.யுடன் நடித்த ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களில் நடித்த ஆனந்தி இப்படத்திலும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் சில பல திகில் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை ஹாரர் காமெடியாக இயக்கியுள்ளாராம் எம்.ராஜேஷ். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து சர்ச்சையையும், வரவேற்பையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் டீஸரை வரும் 14ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம். படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#GVPrakash #KadavulIrukaanKumaru #Rajesh #Arya #Jiiva #Karthi #UdhayanidhiStalin #Anandhi #NikkiGalrani #KIK

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;