பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தமிழ் படம்!

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் தமிழ் படம்!

செய்திகள் 7-Sep-2016 10:36 AM IST Chandru கருத்துக்கள்

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார். ஆன்லைனில் நேரடியாக வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் ‘கர்மா’.

‘கர்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். ஐட்யூன்ஸ், கூகுள் ப்ளே, அமேசான் வீடியோ உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'கர்மா' திரைப்படம் சமீபத்தில் நடந்த Madrid International Film Festivalல் உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதில் தகுதி பெற்றது குறிப்பிடதக்கது. அது மட்டும் இல்லாமல் Hollywood Sky Film Festivalளிலும் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது. இத்திரைப்படம் Experimental வகை சேர்ந்த Independent Cinemaவாகும்.

'கவிப்பேரரசு' வைரமுத்து இப்படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி, பாடியுள்ளார். L.V. கணேசன் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கான ஒளிப்பதிவு V.B. சிவானந்தம், படத்தொகுப்பு வினோத் பாலன்.

#Anurag Kasyap #Akira #Karma #CreativityCriminalProduction #Vairamuthu #LVGanesan #VBSivanandham #VinothBalan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;