தனுஷின் நீண்டநாள் கனவு நனவாகியது!

‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்!

செய்திகள் 7-Sep-2016 10:10 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி என்ற அடையாளங்களோடு சினிமாவிற்குள் நடிகனாக நுழைந்தவர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல உயரங்களை தனுஷ் தொட்டிருந்தாலும், இயக்குனராக வேண்டும் என்பதே அவரின் நீண்டநாள் கனவு. தனது மனைவி ஐஸ்வர்யாவை இயக்குனராக்கி அழகு பார்த்த தனுஷ், தனக்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். இது அவரது நேரம்... ஆம் ‘பவர் பாண்டி’ எனும் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் நடிகர் தனுஷ்.

ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும் ‘பவர் பாண்டி’ படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தனுஷின் ‘வுண்டபர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று காலை இப்படத்தின் பூஜை எளிமையாக நடந்து முடிந்ததை கேள்விப்பட்ட கோலிவுட் ஸ்தம்பித்து நிற்கிறது.

#Dhanush #PowerPandi #RajKiran #Prasanna #ChaayaSingh #Sean Roldan #WunderbarFilms #Kodi #Thodari #ThangaMagan #Maari #Vada Chennai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;