மழைக்காக காத்திருக்கும் தரணிதரன், ‘மெட்ரோ’ ஹீரோ!

தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ ஹிரோ நடிக்கும் படம்!

செய்திகள் 6-Sep-2016 12:54 PM IST VRC கருத்துக்கள்

’பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் அடுத்து ‘மெட்ரோ’ பட கதாநாயகன் ஷிரிஷுடன் கூட்டணி அமைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். மர்ம கதை பாணியில் உருவாகும் இப்படத்தில் மழைக்கு ஒரு மிக முக்கிய பங்கு இருக்கிறதாம்! இதனால இப்படத்தின் படப்பிடிப்பை மழை காலமான டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார் தரணிதரன்.

‘‘ஒரு கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்பது தான் இப்படத்தின் திரைக்கதை. தரணிதரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களை பார்த்து வியந்து போனேன். அந்த படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஷிரிஷ்! இந்த படம் சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கட்டப்பாவ காணோம் 2 நிமிட காட்சி


;