ரெமோ - இசை விமர்சனம்

இளமை துள்ளல்!

இசை விமர்சனம் 6-Sep-2016 11:18 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக இணைந்திருக்கிறது சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணி. ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் என்டர்டெயின்மென்ட்’டின் முதல் தயாரிப்பான ‘ரெமோ’ ஆல்பம் எப்படி இருக்கிறது?

மீசை பியூட்டி....
பாடியவர்கள் : அனிருத், ரிச்சர்டு
பாடலாசிரியர் : விவேக்


ஆல்பத்தின் முதல் பாடலே துள்ளல் இசையுடன் எனர்ஜி கொப்பளிக்க கொடுத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக பாடலைப் பாடியிருக்கும் ரிச்சர்டு, அனிருத்தின் வாய்ஸில் 1000 வோல்டேஜ் எனர்ஜி. ‘ரன் ஓடினா வின் ஆவனா, உன்னோடு நான் ஒண்ணாவேனா, நீ இல்லனா என்னாவேன் நா, குண்டேயில்லா கன் ஆவனா’ என இளமை வரிகளைத் தந்துள்ளார் பாடலாசிரியர் விவேக். மான்டேஜாக ‘ரெமோ’வில் இப்பாடல் இடம்பெற வாய்ப்பிருக்கிறது.

தமிழ் செல்வி....
பாடியவர் : நகாஷ் ஆஸிஸ்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


‘ரெமோ’ படம் முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை ஆல்பத்தின் இந்த இரண்டாம் பாடலான ‘தமிழ் செல்வி’யும் அடித்துக் கூறுகிறது. பேஸ் இசை அதிர, எலக்ட்ரிக் கிடார்கள் வெடிக்க இளமை கொப்பளிக்கும் இசையை வழங்கியிருக்கிறார் அனிருத். ‘வாடி என் தமிழ் செல்வி’ என பாடலை அனிருத் ஆரம்பித்து வைக்க, நகாஷ் ஆஸிஸ் முழுப்பாடலையும் பாடியிருக்கிறார். ‘வாடி என் தமிழ் செல்வி... ஐ வில் டேக் யூ ஷாப்பிங் டு த நல்லி... நீ போகாதேடி தள்ளி தள்ளி... மை வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி’ என தனக்கே உரிய பாணியில் வரிகளில் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

டாவுயா...
பாடியவர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : கு.கார்த்திக்


இது அனிருத்தின் இசையா...? பாடலைப் பாடியவர் சந்தோஷ் நாராயணனா...? என ஆச்சரியப்படுத்தியிருக்கிறது ‘ரெமோ’ டீம். தேவாவின் மியூசிக்கில் கானா பாலா பாடியது போல ஆரம்பிக்கும் இப்பாடல் போகப்போக வேறொரு ‘மூடி’ல் பயணிக்கிறது. வித்தியாசமான பாடல்... கண்டிப்பாக காட்சிகளுடன் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவம் கிட்டும்!

சிரிக்காதே...
பாடியவர்கள் : அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி, அனிருத்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


ஆல்பத்தின் அட்டகாசமான மெலடிப் பாடல். அர்ஜுன், ஸ்ரீநிதியின் குரல்களில் உருவாகியுள்ள இந்த மனதை மயக்கும் ரொமான்டிக் பாடலுக்கு கேட்டவுடன் பிடித்துப்போகும் இசையைத் தந்திருக்கிறார் அனிருத். விக்னேஷ் சிவனின் வரிகளில் காதல் ரசம் சொட்டியிருக்கிறது. ரிப்பீட் மோட்!

செஞ்சிட்டாளே...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகியுள்ள இப்பாடல் ஆல்பத்தின் ஃபேவரைட் பாடலாக உருவாகியுள்ளது. துள்ளல் இசை, யூத்ஃபுல் வரிகள் என இளசுகளை கொண்டாட வைத்திருக்கிறது இந்த ‘செஞ்சிட்டாளே....’. ‘ரெமோ’ டீமின் இந்த வித்தியாசமான பாடலுக்கான காட்சிகள் எப்படியிருக்கும் என்பதே ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

ரெமோ நீ காதலன்...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன்


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பின்னணி இசையாக இடம்பெற்று ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடல். இப்பாடலும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் வரிகள், அனிருத்தின் குரலிலேயே உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நர்ஸாக மாறியதும் இடம்பெறும் பாடலாக இது இருக்கலாம். அவ்வை சண்முகி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள மாடர்ன் டிரென்ட் பாடல் இந்த ‘ரெமோ நீ காதலன்’. விஷுவல் ட்ரீட் நிச்சயம் காத்திருக்கிறது ரசிகர்களுக்கு!

இந்த 6 பாடல்களோடு ‘சிரிக்காதே...’ பாடலின் இன்னொரு வெர்ஷனான ‘கம் குளோசர்’ என்ற பாடலும் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக பார்க்கும்போது, ‘ரெமோ’ ஆல்பம் இன்றைய டீன் ஏஜ்களுக்கான ஆல்பம். விஷுவல்களோடு பார்க்கும்போது குடும்ப ரசிகர்களையும் பெரிதும் கவர வாய்ப்பிருக்கிறது.

ரெமோ.... இளமை துள்ளல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;