ஆரா சினிமாஸின் பிரம்மாண்ட வெளியீடு ‘இரு முகன்’

’இரு முகன்’ பிரம்மாண்ட ரிலீஸ் ப்ளானில் ஆரா சினிமாஸ்!

செய்திகள் 6-Sep-2016 11:03 AM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் முதலானோர் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படம் வருகிற 8-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஷிபு தமீன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை பிரபல ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது! ‘உப்புகருவாடு’, ‘உன்ன்கு என்ன வேணும் சொல்லு’, ‘மசாலா படம்’, ‘அஞ்சல’, ‘ராஜா மந்திரி’ ஆகிய தமிழ் படங்களை விநியோகம் செய்த ‘ஆரா சினிமாஸ்’ இதற்கு முன்னதாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பட விநியோகத்தில் இருந்து வந்த நிறுவனமாகும்! ‘மிஷன் இம்போசிபிள்-5’ உட்பட பல ஆங்கில படங்களையும், ஒரு சில ஹிந்தி படங்களையும் விநியோகம் செய்துள்ள இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட ரிலீசாக ’இரு முகன்’ வெளியாகவிருக்கிறது.

‘இரு முகன்’ திரைப்படத்தை தமிழகத்தில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தியேட்டர்கள் பிடித்து வைத்திருப்பதாக ‘ஆராஸ் சினிமாஸ்’ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா இணைந்து நடிக்கும் ‘தேவி’, விஜய் ஆன்டனியின் ‘செய்த்தான்’, கிருஷ்ணா நடித்து வரும் ‘பண்டிகை’ ஆகிய படங்களின் விநியோக உரிமையையும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்த படங்கள் தவிர தற்போது தயாரிப்பில் இருந்து வரும் மேலும் சில பிரம்மாண்ட படங்களின் விநியோகத்திலும் பங்கு பெறவிருக்கிறது ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம்.

வரும் வியாழக் கிழமை வெளியாகவிருக்கும் ‘இருமுகன்’ படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ‘இரு முகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ஆதிகரித்துக் கொண்டே வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;