சிம்புவுடன் இணையும் தமன்னா!

‘AAA’யில் சிம்புவுடன் இணையும் தமன்னா!

செய்திகள் 6-Sep-2016 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிம்புவின் ஒரு கேரட்கருக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! சிம்புவின் இன்னொரு கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் தமன்னா இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, ஸ்ரேயா ஆகியோருடன் இப்படத்தில் வி.டி.வி.கணேஷ், மஹத் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;