சூர்யாவின் 35வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்!

‘சிங்கம்’ 3ஆம் பாகத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை ‘நானும் ரௌடிதான்’ விக்னேஷ் சிவன் இயக்குகிறார்

செய்திகள் 6-Sep-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

‘போடா போடி’ படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரித்த இப்படம் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’, சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. முதல்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

சூர்யாவின் 35வது படமாக உருவாக உள்ள இப்படத்தின் நாயகி, படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ் 3’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அப்படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;