விஜய்யின் ‘பைரவா’

விஜய்யின் 60ஆவது பட டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 5-Sep-2016 1:19 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்ற படம் ‘தெறி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 60-ஆவது படத்தை விஜய் நடிப்பில் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெயர் சூட்டப்படாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘உங்க வீட்டு பிள்ளை’ போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக தகவல்வகள் வெளிவந்தன. இந்த நிலையில் விஜய்யின் 60ஆவது படத்திற்கு ‘பைரவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மாலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருன் வெளியானது. விநாயக சதுர்த்தியை முன்னிட் விஜய் பட தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருப்பதால விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

வருகிற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தை எம்.ஜி.ஆர்.நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, சிவாஜி நடித்த ‘வாணி ராணி’, அஜித்குமார் நடித்த ‘வீரம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் விஜயராகவன், மலையாள நடிகை அபர்ணா வினோத் மற்றும் டேனியல் பாலாஜி, சதீஷ், ஆர்.கே.சுரேஷ், ‘மைம்’ கோபி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றன. இன்றைய முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான சந்ஷோஷ் நாராயணன் இசை அமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;