பாரதிராஜா பட லொகேஷன்களில் படமான ‘உள்குத்து’

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்தை’ தொடர்ந்து உள்குத்து!

செய்திகள் 3-Sep-2016 2:46 PM IST Top 10 கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரித்துள் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘உள்குத்து’. ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜுவே இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ், நந்திதா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் பாலசரவணன், சரத் லோகித்ஷ்வா, திலீப் சுப்பராயன், ஸ்ரீமன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இணை தயாரிப்பு ஜி.விட்டல் குமார்.

இப்படத்தின் டிரைலரை நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். அத்துடன் பாடல்கள் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது நடிகர் ஸ்ரீமன் பேசும்போது,
‘‘உள்குத்து’ திரைப்படம் முழுவதும் நாகர்கோவில், முட்டம் பகுதிகளில் படமாகியுள்ளது. எனக்கு தெரிந்து இயக்குனர் பாரதிராஜாவுக்கு அடுத்து இந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியவர் கார்த்திக் ராஜுவாகதான் இருக்கும். காரணம் இந்த லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்துவது கஷ்டம். ‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படங்களை தயாரித்து வரும் செல்வகுமாருக்கு இந்த ‘உள்குத்து’ திரைப்படமும் வெற்றிப படமாக அமையும் என்பது உறுதி’’ என்றார்.

‘‘கடல் பகுதியில் நடக்கும் இந்த கதையில் மீன்வெட்டும் தொழிலாளியாக வருகிறார் தினேஷ்! அப்படி மீன் வெட்டும் தொழிலாளியான தினேஷின் ‘உள்குத்து’கள் என்ன என்பதே படம்’’ என்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு. விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்படத்தை தொடர்ந்து ‘கெனன்யா ஃபிலிம்ஸி’ன் தயாரிப்பில் உருவாகி வரும் படங்கள் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘புரூஸ்லீ’, மற்றும் சந்தான்ம் நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;