தங்கர் பச்சான் உதவியாளர் இயக்கும் மெர்லின்!

ஹாரர் பட வரிசையில் மற்றுமொரு படம் ‘மெர்லின்’

செய்திகள் 3-Sep-2016 1:56 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் தங்கர் பச்சானிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வ.கீரா. இவர் இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியன் நடித்துள்ளார். கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்ண்ட படங்களில் நடித்துள்ள அஸ்வினி நடித்துள்ளார். இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ரிச்சா, ‘கயல்’ தேவராஜ், வினோத், ஆதித்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘‘மெர்லின்’ ஒரு ஹாரர் ரக படமாக உருவாகியுள்ளது. இப்படம் நல்ல ஒரு சமூக கருத்தையும் வலியுத்தும் விதமாக அமைந்திருக்கிறது’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் கீரா. இப்படத்தை ‘ஜே.எஸ்.பி.ஃபிலிம் ஸ்டுட்யோஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.

அறிமுக இசை அமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை முத்துக்குமரன் ஏற்றுள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் புரொமோ சாங் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்த பாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா, நடிகர்கள் ஆரி, சிங்காம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டு மெர்லின் படக்குழுவினரை வாழ்த்தினார்கள். விழாவில் திரையிடப்பட்ட படத்தின் டீஸரையும், புரொமோ சாங்கையும் பார்த்த பிபலங்கள் ‘‘இப்படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது டீஸரும், புரொமோ சாங்கும்’’ என்று பாராட்டு தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;