கமல் பட தலைப்பை கைப்பற்றிய ஜெயம் ரவி!

கமல் பட தலைப்பை கைப்பற்றிய ஜெயம் ரவி!

செய்திகள் 2-Sep-2016 6:00 PM IST Chandru கருத்துக்கள்

‘மிருதன்’ பட இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும், நடிகர் ஜெயம் ரவியும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்தின் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தலைப்பு வெளியாகிவிட்டது. படத்தின் தலைப்பு ‘டிக் டிக் டிக்’. இப்படத்தை நேமி சந்த் ஜபக் நிறுவனம் தயாரிக்கிறது, டி.இமான் இசையமைக்கிறார்..

1981ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் தலைப்பை கைப்பற்றியிருக்கிறது ‘மிருதன்’ டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;