வெங்கடேஷ் இயக்கத்தில், வினய் நடிக்கும் திகில் படம்!

வினய் நடிக்கும் திகில் படம் ‘நேத்ரா’

செய்திகள் 2-Sep-2016 12:06 PM IST VRC கருத்துக்கள்

‘செல்வா’, ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘பகவதி’, ‘சண்டமாருதம்’ உட்பட பல படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘நேத்ரா’ என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக தமன் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கி வரும் ‘கடுகு’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் சுபிக்‌ஷா தான் இப்படத்திலும் கதாநாயகி! இவர்களுடன் வின்சென்ட் அசோகன், ‘ரோபோ’ சங்கர், ‘நான் கடவுள்’ ரஜேந்திரன், இமான் அண்ணாச்சி, ஜே.கே.ரெட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் கனடாவிலும் நடக்கவிருக்கிறது. இது அதிரடி திகில் கதையை கொண்ட படமாம். இப்படத்தின் வசனங்களை அஜயன் பாலா எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ஜெயப்பிரகாஷ் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;