கௌதம் கார்த்திக்குடன் இணையும் ‘யு-டர்ன்’ நாயகி!

கண்ணன் இயக்கத்தில் ‘யு-டர்ன்’ நாயகி!

செய்திகள் 1-Sep-2016 5:38 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ முதலான படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் இப்படத்தை ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஆஷாஸ்ரீ என்பவர் தயாரிக்கிறார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது, இப்படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது முடிவாகி உள்ளது. கன்னட ‘யு-டர்ன்’ படத்தில் நடித்த ஷ்ரதா ஸ்ரீநாத், இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். நிவின் பாலி நடிப்பில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் பெயரிடப்பாடாத படத்திலும் இவர் தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;