ஜீவா பட டீஸரை வெளியிடும் விஜய்சேதுபதி!

‘ஆரம்பமே அட்டகாசம்’ டீஸரை வெளியிடும் விஜய்சேதுபதி!

செய்திகள் 1-Sep-2016 4:33 PM IST VRC கருத்துக்கள்

‘லொள்ளு சபா’ ஜீவா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று விஜய்சேதுபதி வெளியிட்டார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீஸரையும் வருகிற 5-ஆம் தேதி, விநாயகசதுர்த்தியன்று வெளியிடவிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தை இயக்கி வரும் ரங்காவை விஜய்சேதுபதிக்கு நீண்ட காலமாக தெரியுமாம். அதனால் ரங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி, விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிட முன் வந்து படக்குழுவினரை வாழ்த்தவும் செய்துள்ளார். ‘ஸ்வாதி ஃபிலிம் சர்க்யூட்’ நிறுவனம் சார்பில் மாலதி வேலு, பத்தூள் சுக்குருல்லா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயா கே.தாஸ் இசை அமைக்கிறார்,

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உத்தரவு மகாராஜா - டீசர்


;