மக்களை கப்பாற்றும் ‘சிவாஜி’யாக விக்ரம் பிரபு!

‘வீரசிவாஜி’ படத்தின் கதை?

செய்திகள் 1-Sep-2016 2:47 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, ஷாம்லி இணைந்து நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தை ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். ‘வீரசிவாஜி’ குறித்து இயக்குனர் கணேஷ் விநாயக் கூறும்போது,

‘‘குடும்பத்துடன் வந்து பார்க்க கூடிய ஜனரஞ்சக படம் வீரசிவாஜி. ஊரையே கொள்ளை அடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த ஊர் மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெறும் வீரமான இளைஞனாக வருகிரார் விக்ரம் பிரபு. அவரது கதாபாத்திர பெயர் சிவாஜி என்பதால் படத்திற்கு ‘வீரசிவாஜி’ என்று தலைப்பு வைத்துள்ளோம்’’ என்றார்.

‘வீரசிவாஜி குறித்து விக்ரம் பிரபு கூறும்போது, ‘‘இந்த கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. ஆனால் படத்திற்கு ‘வீரசிவாஜி’ என்ற டைட்டில் பொருத்தமாக் இருக்கும் என்று இயக்குனர் சொன்னதும் கொஞ்சம யோசித்தேன். காரணம் தாத்தா பெயர் வருகிறதே என்று! ஆனால் அவரோட பெயருக்கும், புகழுக்கும் எந்த களங்கமும் விளைவிக்காத விதம் ஒரு ஜனரஞ்சக படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கணேஷ் விநாயக். என் கேரியரிலும் இது வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

‘வீரசிவாஜி’யின் தயாரிப்பாளர் நந்தகோபால் பேசும்போது, ‘‘நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன்! இதற்கு முன் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற ஒரு படத்தை தயாரித்திருக்கிறேன் என்றாலும் ஒரு தயாரிப்பாளராக எனக்கு பெருமை சேர்த்த படம் இந்த ‘வீரசிவாஜி’ தான்! அதற்கு காரணமானவர் விக்ரம் பிரபு! அவரால் தான் என்னால் அன்னை இல்லத்தில் காலடி எடுத்து வைக்க முடிந்தது. அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ‘ரோமியோ ஜூலியட்’ படம மாதிரி இந்த படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமையும என்பது என் நம்பிக்கை! அதற்கான எல்லா விஷயங்களும் இப்படத்தில் இருக்கிறது!’’ என்றார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லியுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் பிரபு நடித்த முதல் படமான ‘கும்கி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். அதைப் போல ‘கும்கி’ படத்திறிகு இசை அமைத்த டி.இமானுடன் விக்ரம் பிரபு இணையும் ஐந்தாவது படம் ‘வீரசிவாஜி’ என்பது குறிப்பிடத்தக்கது! ‘வீரசிவாஜி’யை இம்மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;