அஜித் பட ஒளிப்பதிவாளர் இயக்குனராகும் படம்!

‘கள்ளாட்டம்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர்!

செய்திகள் 1-Sep-2016 1:01 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் நடித்த ‘கிங்’, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’ முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரமேஷ் ஜி. இயக்குனராக களமிறங்கும் படம் ‘கள்ளாட்டம்’. நந்தா தாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரிச்சர்ட், இளவரசு, குமரன் நடராஜன், எழுமலை, சாரிகா, உஷாஸ்ரீ, மேக்னாஸ்ரீ ஆகியோரும் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ரமேஷ்.ஜி.கூறும்போது,

‘‘மக்களின் நண்பன் காவல் துறை’ என்பதை உறுதியுடன் வெளிப்படுத்தும் கதை. அதில் காவல்துறையினர் எப்படி வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை பெற்று தருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறோம்’’ என்றார்.

இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் உமர் எழிலன் இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை மோகன மகேந்திரன் கவனிகிறார். படத்தொகுப்பை வி.டி.விஜயன் கவனிக்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இப்படம் விரைவில் வெளியாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;